CINEMA
உஷார்…! ஜனநாயகன் பட காட்சிகளை ஷேர் பண்ணா ஜெயில் தான்.. கே.வி.என் நிறுவனம் கொடுத்த வார்னிங்…!!
விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியான சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் படத்தைத் தயாரித்த கே.வி.என் நிறுவனம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதுடன், படத்தின் காட்சிகளைச் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மீறி யாராவது காட்சிகளைப் பரப்பினால் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயாரிப்புத் தரப்பு எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்திற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, ஆரம்பக் காலத்தில் தானும் இதுபோன்ற ஒரு பாதிப்பைச் சந்தித்ததாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். பலரது உழைப்பையும் கனவையும் சிதைக்கும் இச்செயலை ஒடுக்கத் தவறினால், அது ஒட்டுமொத்த அமைப்பிற்கே தோல்வி என்று அவர் சாடியுள்ளார். இதற்கிடையே, இந்தப் பிரச்சினையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளதால் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
