நள்ளிரவில் நடந்த ‘ஜனநாயகன்’ ஆபரேஷன்…! 6 பேர் அதிரடி கைது… நடுங்க வைத்த போலீஸ் ஆக்ஷன்…!! – cinefeeds
Connect with us

CINEMA

நள்ளிரவில் நடந்த ‘ஜனநாயகன்’ ஆபரேஷன்…! 6 பேர் அதிரடி கைது… நடுங்க வைத்த போலீஸ் ஆக்ஷன்…!!

Published

on

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களால் தாமதமான நிலையில், அதன் முழுப்பகுதியும் இணையத்தில் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய சைபர் கிரைம் காவல்துறையினர், டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது 6 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து சட்டவிரோதப் பதிவேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் கூகுள் டிரைவ் மற்றும் கிளவுட் தளங்கள் மூலம் படத்தின் இணைப்புகளைப் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணைய இணைப்புகளை முடக்கியுள்ள போலீசார், இதில் தொடர்புடைய மற்ற நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் யாரும் இத்திரைப்படத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்யவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் எனத் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in