CINEMA
அவர் குடும்பத்தை நான் பிரிக்கல…!” – கதறி அழுத கெனிஷா…!ஒரு லட்சத்திற்கும் மேல் அபராதம்…! துபாயில் சிக்கிய கெனிஷா…! அதிர்ச்சியில் கோலிவுட்…!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் கடந்த 2024ஆம் ஆண்டு முதல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2009இல் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆர்த்தியுடன் வாழ்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும், வீட்டில் தமக்கு முறையான மரியாதை கிடைக்கவில்லை என்றும் கூறி ரவி பிரிவை அறிவித்த நிலையில், கணவருடன் சேர்ந்து வாழ ஆர்த்தியும் அவரது தாயாரும் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்தச் சூழலில், ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாகி அவருடன் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும், தனது புதிய தயாரிப்பு நிறுவனப் பணிகளில் கெனிஷா முன்னணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளானது.
இருப்பினும், இந்த ரிலேஷன்ஷிப்பிலும் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. அண்மையில் கெனிஷா வெளியிட்ட வீடியோ ஒன்றில், தான் ரவியிடமிருந்து விலகுவதாகவும் அவரது குடும்பப் பிரிவுக்கு தான் காரணமல்ல என்றும் எமோஷனலாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆர்த்தியின் சமூக வலைத்தளப் பதிவும், அதற்கு ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆக்ரோஷமாகப் பதிலளித்ததும் இந்த விவகாரத்தை மீண்டும் பூதாகரமாக்கியுள்ளது. குடும்பப் பிரச்னைகள் ஒருபுறமிருக்க, தற்போது பாடகி கெனிஷாவுக்கு துபாயில் புதிய சட்டப் சிக்கல் ஒன்று உருவெடுத்துள்ளது அவருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் துபாயில் நடந்த பாடல் நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு பணம் தரவில்லை என தனியார் நிறுவனம் மீது கெனிஷாவும் அவரது தோழியும் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், தாங்கள் பணத்தைக் கொடுத்துவிட்டதாகக் கூறி அந்த நிறுவனம் தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம், ஐக்கிய அரபு அமீரக இணைய குற்ற சட்டத்தின் கீழ் அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. மேலும், இந்திய மதிப்பில் சுமார் 1,29,000 ரூபாயை அபராதமாக செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவி மோகனுடனான உறவில் விரிசல், நீதிமன்ற அவதூறு வழக்கு என அடுத்தடுத்து சந்திக்கும் சிக்கல்களால் கெனிஷா தற்போது பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.
