3 மகள்களின் தாய்…! கை, கால்களை கட்டி போட்ட அண்ணன்-தம்பி… வீடியோ எடுத்த படி பலாத்காரம் செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

3 மகள்களின் தாய்…! கை, கால்களை கட்டி போட்ட அண்ணன்-தம்பி… வீடியோ எடுத்த படி பலாத்காரம் செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

Published

on

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே, கணவரைப் பிரிந்து தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வரும் பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்துள்ளது. அரசுத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய சுதாகர், ஏற்கனவே மூன்று பெண்களைக் காதலித்து ஏமாற்றிய புகாரில் பணிநீக்கம்  செய்யப்பட்டவர் ஆவார். சம்பவத்தன்று இரவு அப்பெண் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக நடந்து சென்றபோது, மதுபோதையில் வந்த சுதாகர் மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீனு ஆகிய இருவரும் அப்பெண்ணை ஒரு மறைவிடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு, தங்களின் அலைபேசியில் காட்சிகளைப் பதிவு செய்தபடி அந்தப் பெண்ணைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்த அப்பெண்ணைத் பின்தொடர்ந்து வந்த சுதாகர், மீண்டும் அவரிடம் அத்துமீற முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் சற்றும் தாமதிக்காமல் அவசர உதவி எண் 100-க்குத் தொடர்பு கொண்டு காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்குப் போலீசார் விரைந்து வருவதைக் கண்ட சுதாகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நகரிக்கல்லு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அண்ணன், தம்பி ஆகிய இருவரையும் வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in