அரசியலில் அதிரடி திருப்பம்…விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா?…அவரு பாதை வேற, என் பாதை வேற…லதா ரஜினிகாந்தின் ‘மக்கள் மேடை’ பின்னணியில் ரஜினி இருக்கிறாரா?…பரவிய வதந்திகளுக்கு விழுந்த அதிரடி முற்றுப்புள்ளி…! – cinefeeds
Connect with us

CINEMA

அரசியலில் அதிரடி திருப்பம்…விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா?…அவரு பாதை வேற, என் பாதை வேற…லதா ரஜினிகாந்தின் ‘மக்கள் மேடை’ பின்னணியில் ரஜினி இருக்கிறாரா?…பரவிய வதந்திகளுக்கு விழுந்த அதிரடி முற்றுப்புள்ளி…!

Published

on

திரையுலகிலும் அரசியலிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோரைச் சுற்றி பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ‘மக்கள் மேடை’ என்ற இயக்கத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து, இது விஜய்யின் அரசியல் எழுச்சியைக் கண்டு ரஜினியின் தூண்டுதலின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று எனப் பரவலாகப் பேசப்பட்டது. மேலும், விஜய் மீது ரஜினிக்கு பொறாமை என்றும், அதனால்தான் அவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்த விவகாரங்கள் அனைத்திற்கும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லதா ரஜினிகாந்த் மிகவும் ஓபனாகப் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

‘மதுவந்தி டாக்ஸ்’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ‘மக்கள் மேடை’ இயக்கம் குறித்துப் பேசிய லதா, “மக்கள் சக்தியை ஒன்றாகத் திரட்டுவதற்காகவே இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது; இது முன்பே தொடங்கப்பட்ட ஒன்றுதான்” என்று விளக்கமளித்தார். தங்களது நல்ல முயற்சிகளை ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்று வருத்தம் தெரிவித்த அவர், இந்த இயக்கத்திற்கும் ரஜினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறினார். தங்களின் பாதைகள் வெவ்வேறானவை என்றும், தாங்கள் செய்யும் காரியங்களில் ரஜினியைத் தொடர்புபடுத்திப் பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட லதா, சாமானியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யார் வேண்டுமானாலும் தங்கள் இயக்கத்தில் இணையலாம் என்றும், விருப்பமிருந்தால் அண்ணாமலை கூட இதில் இணையலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

தொடர்ந்து, விஜய் மீது ரஜினிக்குப் பொறாமை என்ற விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த லதா ரஜினிகாந்த், இத்தனை வருடங்களாகப் புகழின் உச்சியில் இருக்கும் ஒருவரைப் பற்றி இப்படிப் பேசுவதே மிகப்பெரிய தவறு என்று சாடினார். ரஜினிகாந்த் ஒரு சிறந்த தலைவர் என்றும், பலருக்கு முன்னுதாரணமாகவும் ரோல் மாடலாகவும் திகழும் அவரை இந்த அளவுக்குத் தரம் தாழ்த்திப் பேசுவது மக்கள் மத்தியில் விஷத்தை விதைக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். எவ்வித ஆதாரமும் இன்றி வாய் கூசாமல் இப்படிப் பேசுவது தமிழர்களின் மரபு கிடையாது என்று கூறி, பரப்பப்படும் அனைத்து வதந்திகளுக்கும் அவர் மிகக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in