CINEMA
தலைவர் ரஜினிக்கே இந்த நிலமை என்றால்….? அதெல்லாம் பார்க்கவே ரொம்பவும் கஷ்டமாக இருக்குது – ரஜினிகாந்த் குறித்து வருத்தப்பட்ட நடிகர் விஷ்ணு விஷால்!
நடிகர் விஷ்ணு விஷால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்த கட்டா குஸ்தி 2 படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. அந்த படம் குறித்த பிரமோசன் நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, இதை சொல்லக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் சொல்கிறேன். தலைவரே மைக்கை புடிச்சுகிட்டு நான் விஜய்க்கு எதிரானவன் இல்லைன்னு சொல்கிற நிலைமைதான் இன்னைக்கு இருக்குது.
அப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தலைவரே நாலு நாள் அமைதியாக இருந்தால் அவரை பத்தி தப்பு தப்பான விஷயத்தை ஆன்லைனில் கொண்டு வந்துடுறாங்க. அவரே வேற வழியில்லாம நான் ஏன் இதெல்லாம் பண்ணனும்ன்னு சொல்ற அளவுக்கு இப்போ ஆயிடுச்சு. அதெல்லாம் பார்க்கவே ரொம்பவும் கஷ்டமா இருக்குது என்று நடிகர் விஷ்ணு விஷால் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்
