எதிர்க்கட்சியாக அமர திமுகவுக்கு என்ன பயம்..? பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி..!! – cinefeeds
Connect with us

Uncategorized

எதிர்க்கட்சியாக அமர திமுகவுக்கு என்ன பயம்..? பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி..!!

Published

on

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக அமர திமுகவுக்கு என்ன பயம்?” என்று காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி காரசாரமாகக் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை கோவளத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசை மற்றும் அக்கட்சியின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மேலும், தவெக தலைமையிலான இந்தக் கூட்டணியின் அதிகாரப்பூர்வப் பெயரை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான விஜய் விரைவில் அறிவிப்பார் என்று பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்தார். தங்களது கூட்டணி வெறும் தேர்தல் ஆதாயத்திற்கானதாக இருக்காது எனக் குறிப்பிட்ட அவர், சமூக நீதி, சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட மிகமுக்கியக் கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த கூட்டணி இணைந்து செயல்படும் என்றும் உறுதியளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in