LATEST NEWS
செம ஷாக்..! ஏலக்காய் மண்டியில் முடங்கிய ஓபிஎஸ்.. “இனியும் இவர நம்பினா சரிப்பட்டு வராது” தவெக-விற்கு தாவும் மகன் ரவீந்திரநாத்..? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தென் மாவட்டங்களின் முக்கிய அரசியல் முகமான முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கியுள்ளார். அவர் போடிநாயக்கனூரில் உள்ள தனது சொந்த ஏலக்காய் மொத்த வியாபார மண்டியில் முடங்கி, தொகுதி சார்ந்த மக்கள் பணிகளையும் பொது நிகழ்ச்சிகளையும் முற்றிலுமாக ஓரங்கட்டியுள்ளார். போடிநாயக்கனூர் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினராகியுள்ள அவர், தனக்கு அதிக வாக்குகள் கிடைத்த ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே நன்றி தெரிவித்துவிட்டு, தற்பொழுது தனது வணிகத்திலேயே முழு கவனம் செலுத்தி வருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாக ஓபிஎஸ் அரசியல் மந்தநிலையில் இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் தங்களின் எதிர்காலம் கருதி மாற்றுக்கட்சிகளில் இணையத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, போடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்திய முக்கிய ஆதரவாளர்கள் பலர் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முடிவெடுத்துள்ளனர். இதையறிந்த ஓபிஎஸ், “இப்போதைக்கு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்; பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றாலும், அவரது பிடிபாடற்ற போக்கினால் விரக்தியடைந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பழைய தொண்டர்கள் பலர் தங்களின் தாய் கழகமான அதிமுகவிற்கே மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், ஓபிஎஸ்-ஸின் சமாதானப் பேச்சுகளை அவரது குடும்பத்தினரே முழுமையாக ஏற்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, ஓபிஎஸ்-ஸின் மகனும் முன்னாள் எம்பியுமான ஓ.பி. ரவீந்திரநாத் தற்பொழுது முழுமையாக தவெக ஆதரவாளராக மாறி வருவதாகவும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ரகசியத் தொடர்பில் இருந்து வருவதாகவும் தேனி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சுகள் அடிபடுகின்றன. விரைவில் அவர் மூலமாக ஓபிஎஸ் முகாமைச் சேர்ந்த ஒரு பெரும் பட்டாளமே முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் தகவல், தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
