LATEST NEWS
ஆட்சியை கவிழ்க்க சதி… செந்தில் பாலாஜிக்கு காவல்துறை போட்ட அடுத்த ஸ்கெட்ச்.. இரவோடு இரவாக அதிரடி திருப்பம்..!!
சென்னை போலீஸார் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை அவர் புறக்கணித்துள்ளார். நேற்று காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டிய அவகாசம் முடிந்த பின்னரும் அவர் விசாரணைக்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, சென்னை போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கையாக அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இந்த முறையும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகத் தவறினால், சட்டப்படி அவர்களைக் கைது செய்வதற்குத் தேவையான உரிய நீதிமன்ற உத்தரவைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர்.
