“சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா?!”.. மனைவியின் விபரீத செயல்.. அலறியடித்து ஓடிய கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா?!”.. மனைவியின் விபரீத செயல்.. அலறியடித்து ஓடிய கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Published

on

ஹரியானா மாநிலம் குருகிராமில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சுனில் அகிர்வார் என்பவருக்கும், அவரது மனைவி கஞ்சன் அகிர்வார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. ஒரு நாள் வழக்கம்போல் சுனில் வேலைக்குக் கிளம்பும்போது தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். இதனால் கடுமையான கோபமடைந்த கஞ்சன், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த காய்கறிக் குழம்பை அப்படியே சுனிலின் உடல் மீது ஊற்றியுள்ளார். இதில் சுனிலின் உடல் வெந்து, பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானார்.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்ட சுனில், தனது மனைவியிடம் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தனது சொந்த ஊரான மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஜஸ்குவா கலா கிராமத்திற்குத் தப்பியோடி வந்துள்ளார். மேலும், அங்குள்ள எஸ்பி அலுவலகத்தில் சுனில் எழுத்துப்பூர்வமாகப் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மனைவியால் தனது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதாகவும், தனக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in