“நீ எனக்கு மட்டும்தான்… ராகுலோட பேசக்கூடாது!”.. திருமணமான பெண்ணுக்காக மோதிக்கொண்ட வாலிபர்கள்.. போட்டியில் முடிந்த கொடூர கொலை..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீ எனக்கு மட்டும்தான்… ராகுலோட பேசக்கூடாது!”.. திருமணமான பெண்ணுக்காக மோதிக்கொண்ட வாலிபர்கள்.. போட்டியில் முடிந்த கொடூர கொலை..!!

Published

on

வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த ராகுல் ஆகிய இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தனர். இதில் வினோத்குமார் அந்தப் பெண்ணை ராகுலுடன் பழகக்கூடாது எனத் தடுத்து, “நீ எனக்கு மட்டும்தான்” என்று கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணும் வினோத்குமாரின் செயலை எதிர்த்து கண்டித்துள்ளார்.

இந்த விரோதத்தால் ஆத்திரமடைந்த ராகுல், வினோத்குமாரைப் பழிவாங்கத் திட்டமிட்டார். ஒரு நாள் இரவு, அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வினோத்குமார் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு சென்ற ராகுல் அவரிடம் மீண்டும் சண்டையிட்டுள்ளார். போதையில் இருந்த வினோத்குமாரை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கிய ராகுல், கழுத்தில் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். கொலைக்குப் பிறகு ஆயுதத்தைக் கிணற்றில் வீசிவிட்டுத் தப்பிய ராகுலை, அரியூர் போலீசார் ஆதாரங்களுடன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in