LATEST NEWS
எல்லாம் வெறும் விளம்பரம்தானா?”.. நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. தவெக அரசை வெளுத்து வாங்கிய கனிமொழி எம்பி.. பரபரப்பு எக்ஸ் பதிவு..!!
தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இளம்பெண் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலிக்க மறுத்த காரணத்திற்காக இப்பெண் மீது இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பொது இடத்தில் அரங்கேறிய இச்சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள், குற்றவாளியைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
தருமபுரியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பேருந்து நிலையத்திற்குள், இளம்பெண்ணொருவர் கத்தி குத்துக்கு உள்ளாக்கப்பட்டு, படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சினிமா பாணியில் தவெக அரசு தொடங்கிய பெண்கள் பாதுகாப்பு சிறப்புப்படை எல்லாம்…— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 8, 2026
இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தமிழக அரசை நோக்கிக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். சினிமா பாணியில் தவெக அரசு தொடங்கிய பெண்கள் பாதுகாப்பு சிறப்புப்படை எல்லாம் வெறும் விளம்பரத்திற்காக மட்டும்தானா என்று அவர் சாடியுள்ளார். மேலும், தருமபுரி பேருந்து நிலையத்திற்குள் இளம்பெண் கத்திக்குத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயமடைந்த செய்தி தனக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தனது பதிவில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
