ஊரக வளர்ச்சித் துறை 839 காலி பணியிடங்கள்.. ஆகஸ்ட்-15 வரை விண்ணப்பிக்கலாம்..TNPSC முக்கிய அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஊரக வளர்ச்சித் துறை 839 காலி பணியிடங்கள்.. ஆகஸ்ட்-15 வரை விண்ணப்பிக்கலாம்..TNPSC முக்கிய அறிவிப்பு..!!

Published

on

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள், வரும் 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் (Online) சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை விண்ணப்பதாரர்களின் வசதிக்காகத் தேர்வு கட்டணத்தை UPI மூலமும் செலுத்துவதற்கான புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பதவிகளுக்கான ஓ.எம்.ஆர். மற்றும் கணினி வழித் தேர்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று TNPSC அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in