LATEST NEWS
JUST IN: நாதகவில் இருந்து முக்கிய தலைவர் விலகினார்.. அதிர்ச்சியில் சீமான்..!!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துபாண்டி, கட்சியில் ஏற்பட்ட சில சங்கடங்கள் காரணமாக தம்மால் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை எனக் கூறி, கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியை விட்டு விலகினாலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு என்றும் தம்பியாகவேத் தொடர்வேன் என்றும் அவர் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றிய ஒரு மூத்த நிர்வாகி தற்போது கட்சியிலிருந்து வெளியேறியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
