“தாத்தா தான் தனியா கூட்டிட்டுப்போயி” பேத்தின்னுகூட பாக்காம 3 மாசம் கர்ப்பமாக்கிய 73 வயது காமுக தாத்தா… போலீசிடம் கதறிய 13 வயது சிறுமி… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!! – cinefeeds
Connect with us

CRIME

“தாத்தா தான் தனியா கூட்டிட்டுப்போயி” பேத்தின்னுகூட பாக்காம 3 மாசம் கர்ப்பமாக்கிய 73 வயது காமுக தாத்தா… போலீசிடம் கதறிய 13 வயது சிறுமி… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

Published

on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தந்தை இல்லாமல் தாயுடன் தனியாக வசித்து வந்த 15 வயது பேத்தியை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தாவை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததால், அவரது மனைவியும் மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான ராசு என்ற பெரியவர் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வந்து சென்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் வலுக்கட்டாயமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறவே, அவர் ராசுவைக் கண்டித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். ஆனால், தனது கொடூர புத்தியை நிறுத்தாத ராசு, கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திப் புகுந்து, சிறுமியை மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவிவரம் அறிந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் ராசுவைச் சரமாரியாக அடித்து உதைத்துக் கண்டித்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிய தாய் அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தாயும் மகளும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் ராசு மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in