LATEST NEWS
BREAKING: சற்றுமுன் ஆஜரானார் செந்தில் பாலாஜி… போலீஸ் குவிப்பு..!!
எம்எல்ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள சூழலில், உயர்நீதிமன்றத்தின் (HC) உத்தரவின்படி இன்று முதல் தினசரி காலை மற்றும் மாலை என இருவேளையும் காவல் நிலையத்தில் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும்.
இதனையொட்டி, செந்தில் பாலாஜி ஆஜராகும் திருவல்லிக்கேணி காவல் நிலைய வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை தரப்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகச் செய்யப்பட்டுள்ளன.
