LATEST NEWS
ரயில் பயணிகளே உஷார்!.. ரூ.500 இல்லை.. இனி ரூ.2,500 கழன்றுவிடும்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!
பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில் விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மற்ற பயணிகளின் சௌகரியத்திற்கும் நிம்மதிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. அதில், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் போது அலைபேசியை ஸ்பீக்கர் மோடில் பயன்படுத்துவதோ, உரத்த குரலில் பேசுவதோ, சக பயணிகளுக்கு இடையூறு தருவதோ சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ் குற்றமாகப் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தேவையில்லாத சத்தங்களை எழுப்பி மற்றவர்களின் பயணச் சூழலைப் பாதிக்க வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்துகிறது.
மெட்ரோ ரயில்களில் மற்ற பயணிகளுக்குத் தொந்தரவு தருபவர்களுக்கான அபராதத் தொகையை 500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த ஜூன் 19 அன்று ‘ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026’-இன் கீழ் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின்படி, பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மெட்ரோ வளாகத்திலிருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் ஸ்பீக்கரில் ஆடியோ கேட்பதைத் தவிர்த்து, கண்டிப்பாக ஹெட்போன்களைப் பயன்படுத்த வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
