“அம்மா சீக்கிரம் வாங்க.. என்னைக் கொன்னுடுவாங்க !”.. நள்ளிரவில் தாயிடம் கதறிய காதலன்.. காதலி வீட்டில் நடந்த கொடூர கொலை.. நெஞ்சை உலுக்கும்சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா சீக்கிரம் வாங்க.. என்னைக் கொன்னுடுவாங்க !”.. நள்ளிரவில் தாயிடம் கதறிய காதலன்.. காதலி வீட்டில் நடந்த கொடூர கொலை.. நெஞ்சை உலுக்கும்சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தில் நள்ளிரவில் காதலியைச் சந்திக்கச் சென்ற 19 வயது இளைஞரான சிவபிரசாத், பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத்தும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், நள்ளிரவில் அவரது அறையில் இருவரும் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அறைக்குள் நுழைந்த பெண்ணின் தந்தை ராகேஷ் ராஜ்புத் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆத்திரமடைந்து சிவபிரசாத்தைத் தடிகள் மற்றும் கால்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். காதலனைக் காப்பாற்ற முயன்ற அந்த இளம்பெண்ணையும் அவர்கள் இரக்கமின்றி தாக்கியதில், அவரும் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலின்போது உயிருக்குப் போராடிய சிவபிரசாத், நள்ளிரவு 12 மணியளவில் தனது தாயைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “அம்மா… சீக்கிரம் வாங்க… என்னை கொலை செய்துவிடுவார்கள்” என்று கதறி அழுதுள்ளார். இதனால் பதறிப்போன அவரது தாய், உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவபிரசாத்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றார். ஆனால், வழியிலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையுண்ட இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணின் குடும்பத்தாரிடம் இக்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in