LATEST NEWS
நொடிப் பொழுதில் மிராக்கிள்!.. ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்.. பாய்ந்து சென்று காப்பாற்றிய ரயில்வே ஊழியர்.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!!
கேரளாவின் கொச்சுவேலி நிலையத்திலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகர் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க இளம் பயணி ஒருவர், கொங்கன் ரயில்வே பாதையில் உள்ள முர்தேஷ்வர் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து திடீரென இறங்க முயன்றுள்ளார். அப்போது அவர் நிலைதடுமாறி ரயிலுக்கும் தளமேடைக்கும் இடையே இருந்த இடைவெளியில் விழுந்து தண்டவாளத்தில் சிக்கவிருந்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த கணபதி நாயக் என்ற ரயில்வே ஊழியர், நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்டு, பாய்ந்து சென்று அந்தப் பயணியை விபத்தில் சிக்காமல் பத்திரமாக இழுத்துக் காப்பாற்றினார்.
கணபதி நாயக்கின் இந்தத் துணிச்சலான செயலால் அந்த இளைஞரின் உயிர் மயிரிழப்பில் காப்பாற்றப்பட்டது. இந்தத் திக் திக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வெளியாகி பலரால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்து ஒரு உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் கணபதி நாயக்கிற்கு இணையவாசிகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில், இந்திய ரயில்வே நிர்வாகம் அவரது இந்த வீரமிக்க செயலைப் பாராட்டி ₹10,000 ரொக்கப் பரிசினை வெகுமதியாக வழங்கி கௌரவித்துள்ளது.
