CINEMA
“நாட்டை ஆளும் என் அண்ணன்!”.. விஜய்யை நேரில் சந்தித்துவிட்டு சிவகார்த்திகேயன் போட்ட எமோஷனல் போஸ்ட்.. இணையத்தைக் கலக்கும் பதிவு..!!
நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, திரைத்துலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் பிரபலங்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சந்திப்புகளின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் தினந்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், நடிகராக இருந்து நாட்டை ஆள்பவராக மாறியுள்ள விஜய்யின் இந்த அசாதாரணமான பயணம் குறித்துப் பாராட்டியுள்ளார். மேலும், ‘ரசிகன் எக்ஸ்பிரஸ்’ நிகழ்ச்சியில் தொடங்கி, விஜய் விருதுகள் மேடை, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தது வரை எனத் தனது திரைப்பயண நினைவுகளைக் குறிப்பிட்டு, இந்தத் தருணம் தனக்கு எப்போதும் மிகவும் ஸ்பெஷலானது என்றும், தங்களின் இந்தச் சகோதரத்துவ பிணைப்பு என்றும் தொடரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
