Uncategorized
பகீர் சிசிடிவி..! ஆன்லைன் பார்சல் வாங்க வந்த சிறுமி… டெலிவரி ஊழியர் செய்த காரியத்தால் அலறிய தாய்… இணையத்தில் குவியும் பாராட்டு..!!
சிறுமி ஒருவரிடம் பார்சலை வழங்கிவிட்டு, வீட்டுக்குள் நுழைய முயன்ற ஆன்லைன் டெலிவரி ஊழியரை, சிறுமியின் தாய் சமயோசிதமாகத் தடுத்து நிறுத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன. பார்சல் வழங்கியதற்கான சான்றுப் புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கூறி, அந்த ஊழியர் வாசலைக் கடந்து வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க முயன்றுள்ளார்.
அப்போது வீட்டில் வேறு பெரியவர்கள் யாரும் இல்லை என நினைத்து அந்த ஊழியர் உள்ளே நுழைய முயன்ற நிலையில், உடனடியாக அங்கு வந்த சிறுமியின் தாய், அவரை வீட்டுக்கு வெளியே இருக்குமாறு எச்சரித்துத் தடுத்து நிறுத்தினார். இந்தச் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஜூலை 16-ம் தேதி இரவு 8:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த சிசிடிவி வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. ஆன்லைன் டெலிவரி பெறும்போது, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தனியாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தாயின் இந்த உடனடி விழிப்புணர்வும் துணிச்சலான நடவடிக்கையும் ஒரு சாத்தியமான ஆபத்தைத் தடுத்துள்ளதாகவும் இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
