CRIME
“உனக்கும் அவனுக்கும் என்ன இருக்கு.?” மனைவியை நண்பனுடன் சேர்த்து வைத்து சந்தேகப்பட்ட கணவன்.. கத்தரிக்கோலை எடுத்து.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!!
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீலம்பூர் கௌதம்புரி குடியிருப்புப் பகுதியில், 45 வயது மதிக்கத்தக்க மனைவிக்குத் தன்னுடன் வேலை செய்யும் நண்பருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த கணவர், அவரை கத்திரிக்கோலால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலையுண்ட பெண்ணின் கணவர் சலீம் (52) என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே இந்தச் சந்தேகத்தின் காரணமாகத் தொடர்ச்சியாகக் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி மாலை, தம்பதியினருக்கு இடையே மீண்டும் இதே விவகாரம் தொடர்பாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சலீம், வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவியின் உடலில் பல இடங்களில் கொடூரமாகக் குத்தியுள்ளார். மனைவி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்குப் போராடிய நிலையில், சலீம் வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். தகவலறிந்து வந்த சீலம்பூர் போலீசார், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகள், செல்போன் தரவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். பல மணி நேரத் தேடுதலுக்குப் பின், உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த குற்றவாளி சலீமை தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரத்தக் கறை படிந்த கத்திரிக்கோல் மற்றும் ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் போலீசார் தீவிர ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
