LATEST NEWS
“கைதான சில நிமிடங்களில் பரபரப்பு ட்விஸ்ட்” தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார் பாடகர் அறிவு.. வெளியான புகைப்படம்..!!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், இன்று தலைமைச் செயலகப் பகுதிக்குள் முழக்கங்களை எழுப்பிய அறிவை போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்தத் திடீர் பரபரப்பைத் தொடர்ந்து, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாடகர் அறிவு உடனடியாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் பேசுவதற்குக் கொண்டு செல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே முதலமைச்சருக்கும் பாடகருக்கும் இடையே இந்த அவசரப் பேச்சுவார்த்தை அரங்கேறியிருப்பது அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
