CRIME
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. சிறை சுவரில் ஏறிய பூனை… கழுத்தில் இருந்த ரகசியம்.. ரஷ்யாவில் அம்பலமான பகீர் கடத்தல் பின்னணி..!!
ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள 17-ஆம் எண் சீர்திருத்தச் சிறை வளாகத்திற்குள், பூனை ஒன்றின் கழுத்தில் துணிப் பட்டைகளைக் கட்டி போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறைக் காவலர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வளாகத்திற்குள் நுழைந்த தெருப் பூனையின் கழுத்தில் சந்தேகத்திற்கிடமான பட்டைகள் இருப்பதை கவனித்துப் பிடித்தனர். சோதனையில், சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு வழங்குவதற்காகப் பட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை அதிகாரிகள் மீட்டனர்.
பூனைகள் குறுகிய இடங்கள் மற்றும் சுவர்கள் வழியாக எளிதாக நடமாட முடியும் என்பதால், சந்தேகம் வராமல் இருக்க குற்றவாளிகள் பூனையைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பூனைக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை என்பதை உறுதிசெய்த ரஷ்ய சிறைச்சாலை சேவை (FSIN) அதிகாரிகள், பூனையை விடுவித்துவிட்டு இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள கடத்தல் வலையமைப்பு மற்றும் போதைப்பொருளைப் பெறவிருந்த கைதி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
