LATEST NEWS
“அடப்பாவமே! உயிருக்குப் போராடும் நோயாளிகளிடமும் இப்படியொரு கொள்ளையா..?!” பிடுங்கித் தின்னும் இடைத்தரகர்கள்.. வைரலாகும் அரசு மருத்துவமனையின் வீடியோ..!!
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் இக்கட்டான சூழலையும், அவர்களின் பயத்தையும் பயன்படுத்திச் சில தனியார் ஏஜெண்டுகளும், இடைத்தரகர்களும் பணத்தைச் சுரண்டும் அவல நிலை பெரும் கவலையளிக்கிறது. உயிருக்குப் போராடும் உறவினரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கும் குடும்பத்தினர், பணத்தை விட உயிருக்கே முதலிடம் தருவார்கள் என்பதை முதலீடாக வைத்து, இத்தகைய கும்பல் அவர்களை ஏமாற்றிப் பெருந்தொகையைக் கொள்ளையடிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
हर सरकारी अस्पताल में यह प्राइवेट वाला खेल चल रहा है हर जगह लूट हो रही है।
मरीज या खुद पहुंच जाए या उसे कोई परिवार का व्यक्ति लेकर पहुंच जाए, फिर उसकी मजबूरी का फायदा उठाकर उसे लूटा जाता है।
इंसान और पैसा में से आदमी इंसान चुनता है इसीलिए लूटने मे कोई कसर नहीं छोड़ी जाती है। pic.twitter.com/gOgoSQfaMp— Anuj Agnihotri Swatntra (@swatntra_anuj) July 28, 2026
அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ கிடைக்க வேண்டிய அவசர சிகிச்சை, பரிசோதனைகள் மற்றும் மருந்துகளைக் காரணம் காட்டி, நோயாளிகளைத் தனியார் மையங்களுக்குத் திருப்பி விடுவது போன்ற சட்டவிரோதச் செயல்கள் தொடர்கின்றன. எளிய மக்களின் அச்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் இத்தகைய தனியார் நெட்வொர்க்குகளைக் கண்டறிந்து, அரசு மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
