LATEST NEWS
“அடேங்கப்பா..! வெளியில் சாதாரண டப்பா… உள்ளே பார்த்தால் 5 ஸ்டார் ஹோட்டல்.. இந்திய ரயில்வேயின் இந்த ரகசிய கோச் வீடியோவை பார்த்தீங்களா..? அசந்துபோன நெட்டிசன்கள்..!!
இந்திய ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் தண்டவாளப் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தும் ஸ்பெஷல் இன்ஸ்பெக்சன் கேரேஜ் ரயில் பெட்டியின் உட்புற அமைப்பு இணையத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சலூன் கோச் போன்று தோற்றமளிக்கும் இந்தப் பெட்டியில், நவீன சமையலறை, குளிரூட்டப்பட்ட உணவு அறை, டிவிகளுடன் கூடிய வரவேற்பறை, விசாலமான படுக்கையறைகள் மற்றும் இணைக்கப்பட்ட குளியலறைகள் என அனைத்து அதிநவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
https://www.instagram.com/reel/DbGcH8chOLz/?utm_source=ig_embed&ig_rid=AxbtOZQ32khh_1wyrQnWW8t
வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு சாதாரணக் குடிசை போலத் தோற்றமளிக்கும் இந்தப் பெட்டி, உள்ளே நுழைந்தால் ஒரு அரண்மனை அல்லது மினி ரிசார்ட் போலக் காட்சியளிப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆடம்பர ரயில் பெட்டியின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பயனர்கள், “ஒரு புத்தகத்தை அதன் அட்டைப்படத்தைக் கொண்டு மதிப்பிடக்கூடாது” என்பது இதற்குப் பொருந்தும் எனத் தங்களது சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
