LATEST NEWS
முதலமைச்சர் விஜய் ஒரு முட்டாள்… ஆட்சி நடத்த அனுபவமே இல்லை… தவெக விஜய்யை கடுமையாக சாடிய ஆர்.பி. உதயகுமார்..!!
சிதம்பரம் அருகே நடைபெற்ற அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் கடுமையாகச் சாடினார். மேகதாது விவகாரம் தொடர்பாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதற்குக் கூட நீண்ட காலம் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்துவதற்கும் மக்கள் பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் போதிய அரசியல் அனுபவம் இல்லை என்றும், மேடைப் பேச்சுகளைத் தாண்டி போதிய தெளிவு இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தவெக தலைவரைத் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சித்துப் பேசியதாகக் கூறி, ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் நாகரிகமற்றுப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறி, தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் அவருக்குத் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
