என்னதான் இருந்தாலும் ஜோசப் விஜய் எங்களோட CM… அவர் என்ன உங்களுக்கு கிள்ளுக்கீரையா..? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் திடீர் சப்போர்ட்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னதான் இருந்தாலும் ஜோசப் விஜய் எங்களோட CM… அவர் என்ன உங்களுக்கு கிள்ளுக்கீரையா..? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் திடீர் சப்போர்ட்…!!

Published

on

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் பிடிவாதப் போக்கைக் கண்டித்து தஞ்சாவூரில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். காவிரி விவகாரத்தில் டி.கே.சிவகுமாரை கடுமையாகத் தாக்கிப் பேசிய அவர், அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், “என்னதான் இருந்தாலும் ஜோசப் விஜய் எங்களுடைய சிஎம் ” என்று குறிப்பிட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், நடிகர் விஜய்யின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தான் மிகுந்த வேதனைப்படுவதாக நயினார் நாகேந்திரன் பொதுமேடையில் தெரிவித்துள்ளார். கூட்டணி விவகாரங்களில் விஜய்யை முன்னிறுத்தி நடக்கும் அரசியல் நகர்வுகளைச் சாடிய அவர், “வா… வா… என அழைப்பதற்கும், பின்னர் வர வேண்டாம் என சொல்வதற்கும் அவர் என்ன கிள்ளுக்கீரையா?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யை மற்ற அரசியல் கட்சிகள் நடத்தும் விதம் தனக்கு வருத்தமளிப்பதாக பாசத்துடனும் அதே வேளையில் விமர்சனக் கணைகளுடனும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in