அட பைத்தியக்காரப் பயலுகளா..? விஜய் கடவுளின் குழந்தை… கர்நாடகாவுக்குப் போகணும்னு நினைச்சாரு, உடனே மழை பெஞ்சுடுச்சு… வழக்கம் போல கலாய்த்த சீமான்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட பைத்தியக்காரப் பயலுகளா..? விஜய் கடவுளின் குழந்தை… கர்நாடகாவுக்குப் போகணும்னு நினைச்சாரு, உடனே மழை பெஞ்சுடுச்சு… வழக்கம் போல கலாய்த்த சீமான்…!!

Published

on

வழக்கம்போல் இந்த வருடமும் தமிழகத்திற்குக் காவிரித் தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடக அரசு அறிவித்த நிலையில், சுமுகத் தீர்வு காண்பதற்காகக் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரைச் சந்தித்துப் பேசத் தமிழக முதல்வர் விஜய் முடிவெடுத்தார். எனினும், இந்த பேச்சுவார்த்தை முயற்சிக்குக் கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் வெடித்தன. இதன் காரணமாக, ‘இப்போதுள்ள சூழ்நிலையில் விஜய் இங்கே வர வேண்டாம்’ எனக் கர்நாடகா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கர்நாடகாவில் பேச்சுவார்த்தைக்குத் தடை ஏற்பட்டதை அடுத்து, காவிரி நீர் உரிமையைப் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகத் தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக, கடந்த சில நாட்களாகக் கர்நாடகா மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாகக் கபினி அணை நிரம்பி, அங்கிருந்து 12,000 கன அடி நீர் தமிழகத்திற்குத் திறந்து விடப்பட்டது. இதனால் விரைவில் காவிரி நீர் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.

Advertisement

காவிரி நீர் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களும் விஜய் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ‘விதியுடன் மோது விஜயுடன் மோதாதே’ என்றும், ‘விஜய் கடவுளின் குழந்தை; அவர் முயற்சியும் எண்ணமும் தூய்மையானது என்பதால் தான் கர்நாடகாவில் மழை பெய்து தமிழகத்திற்குத் தண்ணீர் வந்துள்ளது’ என்றும் இணையத்தில் பதிவுகளைப் பதிவிட்டுப் பிரச்சாரம் செய்தனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெகவினரின் பதிவுகளைக் கடுமையாக நக்கலடித்தார். “விஜய் கர்நாடகாவுக்குப் போகணும்னு நினைச்சாரு, உடனே மழை பெஞ்சுடுச்சு… அவர் கடவுளின் குழந்தை என்பதால் கர்நாடகாகாரங்க தண்ணீர் திறந்து விட்டாங்கனு சொல்றீங்களே; ஏன்டா, கடவுளின் குழந்தை இங்க இருக்கும் போது மழை ஏன்டா கர்நாடகாவில் பெய்யுது? இங்கேயே பெஞ்சிட்டு போக வேண்டியதுதானடா! இங்கே மழை பெஞ்சா நாங்களே புடிச்சுக்குறோம்… கர்நாடகாவில் இருந்து கடவுள் எனக்குத் தண்ணீர் திறந்து விடணும்னு சொல்றீங்களே, பைத்தியக்காரங்களா?” என அவர் தனக்கே உரித்தான பாணியில் சாடினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in