“இனி விவசாயிகள் கையில் AI தொழில்நுட்பம்” ₹2 கோடியில் அதிநவீன உழவர் செயலி.. பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி விவசாயிகள் கையில் AI தொழில்நுட்பம்” ₹2 கோடியில் அதிநவீன உழவர் செயலி.. பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு..!!

Published

on

தமிழகத்தில் த.வெ.க. அரசு தாக்கல் செய்துள்ள 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்குத் தனிப்பயன் சேவைகளை வழங்குவதற்காக ₹2 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய ஏஐ உழவர் செயலி அறிமுகப்படுத்தப்படும் என வேளாண் துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். இந்த அதிநவீன செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வானிலை நிலவரம், பாசன வசதிகள் மற்றும் சந்தை விலை நிலவரம் போன்ற அத்தியாவசியத் தகவல்களைத் தங்களது மொபைல் போன் மூலமாகவே உடனுக்குடன் துல்லியமாக அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் பல்வேறு முக்கிய நிதி ஒதுக்கீடுகளையும் அமைச்சர் வினோத் வெளியிட்டுள்ளார். அதன்படி, பயறு மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவு பெற ₹203.64 கோடியும், சிறுதானிய இயக்கத்திற்கு ₹63.81 கோடியும், பருத்தி மறுமலர்ச்சி திட்டத்திற்கு ₹27.21 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் நோக்கில் காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ₹7.35 கோடியும், வேளாண் காடுகள் திட்டத்திற்கு ₹170.70 கோடியும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in