CRIME
“உன்னால குடும்ப மானமே போச்சு…” கர்ப்பமானதால் ஆத்திரம்… திருமண ஆகாத மகளை ஆக்ராவிற்கு அழைத்துச் சென்று … ஆற்றில் மூழ்கடித்துக் கொன்ற தந்தை..!!
டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள டிக்ரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 52 வயதான லாக்பத் சிங் என்பவரின் 18 வயது திருமணமாகாத மகள் கர்ப்பமானதால், சமூக அவமானம் ஏற்படும் என அஞ்சி அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சை என்ற போர்வையில் தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு மகளை வரவழைத்த அவர், ஜூலை 29 அன்று தனது உறவினர் ஒருவருடன் இணைந்து ஆக்ராவின் பசௌனி பகுதியில் உள்ள சம்பல் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று நீரில் மூழ்கடித்துக் கொன்றுள்ளார். மேலும், இந்த கொடூர சம்பவத்தின் போது அவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுத்துள்ளனர்.
கொலைக்குச் பிறகு டெல்லிக்குத் திரும்பிய சிங், தன் மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காகவும், இதனை ஒரு கடத்தல் அல்லது காணாமல் போன சம்பவமாக சித்தரிப்பதற்காகவும் காவலர் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார். புகாரைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினருக்கு லாக்பத் சிங்கின் வாக்குமூலங்களில் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. தீவிர விசாரணைக்குப் பிறகு, உண்மை வெளிவரவே அவரும் அவரது உறவினரும் கைது செய்யப்பட்டு, ஆக்ராவில் உள்ள குற்ற நிகழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தற்போது வரை பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் இன்னும் ஆற்றிலிருந்து மீட்கப்படவில்லை என்றும், சம்பல் ஆற்றில் தீவிர தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்து உள்ளது.
