LATEST NEWS
“ஆணி வைத்த லத்தியால் போராடிய மாணவர்களை அடிக்க உத்தரவிட்டது யார்..? அமித் ஷா பதில் சொல்வாரா… அல்லது திறமையற்றவர் என ஒப்புக் கொண்டு பதவி விலகுவாரா…?” ராகுல் காந்தி ஆவேசம்..!!
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்குவதற்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆணி பொருத்தப்பட்ட லத்திகளைக் கொண்டு மாணவர்களைத் தாக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
டெல்லி காவல்துறையும், அதிரடி விரைவுப் படையும் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டிலேயே செயல்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இந்தத் தாக்குதலுக்கு அவரே உத்தரவிட்டிருந்தார் என்றால் அவர் தண்டனைக்குரியவர் என்றும், அவரது கட்டுப்பாடு மற்றும் அறிவுக்கு எட்டாமல் இச்சம்பவம் நடந்திருந்தால் அவர் திறமையற்றவர் என்றும் விமர்சித்துள்ளார். எனவே, இவ்விரண்டு காரணங்களில் எதுவாக இருந்தாலும் அமித் ஷா உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
