CRIME
FLASH: அடக் கடவுளே..! சிவகங்கை காயமே ஆறல… அதுக்குள்ள சென்னையில் பிளஸ்-2 மாணவன் அடித்து படுகொலை..! திருவொற்றியூரில் பெரும் பரபரப்பு..!!
சென்னை திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா பள்ளி அருகே பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் துயரமான சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே பள்ளி வளாகத்திலேயே பிளஸ்-2 மாணவரை சக மாணவரே கத்தியால் குத்திய கொடூர சம்பவத்தின் வடு மக்கள் மனதில் இருந்து இன்னும் அகலாத நிலையில், தற்போது பட்டப்பகலில் மேலும் ஒரு பிளஸ்-2 மாணவன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
