அடக் கடவுளே… 3-வது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரை வயது குழந்தை… ! நொடிப் பொழுதில் நேர்ந்த விபரீதம்..! பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக் கடவுளே… 3-வது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரை வயது குழந்தை… ! நொடிப் பொழுதில் நேர்ந்த விபரீதம்..! பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!!

Published

on

பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளது. இந்த பயங்கர சம்பவம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலை 10:50 மணியளவில் மடிவாளா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. பால்கனி அருகே குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது, பால்கனி கிரில் மீது ஏறியதில் எதிர்பாராதவிதமாக 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை கீழே விழுந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள் உடனடியாக உதவிக்கு ஓடிவந்தனர். ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்க நேரமில்லாததால், கடுமையாகப் காயமடைந்த குழந்தையை உடனடியாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி, அருகில் உள்ள கோரமங்களாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இச்சம்பவம் குடியிருப்பு பகுதிகளில், குறிப்பாக பால்கனி போன்ற ஆபத்தான இடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிறு குழந்தைகளை ஒரு நொடி கூட தனியாக விட்டுவிட வேண்டாம் என்று காவல்துறையினர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கவனச்சிதறல் ஏற்படும் சிறு இடைவெளியிலும் குழந்தைகள் ஆபத்தான இடங்களை நோக்கிச் சென்றுவிடக்கூடும் என்பதால், எப்போதும் தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in