CRIME
அடப்பாவி..! வங்கிக்குள்ளேயே கைவரிசை காட்டிய மர்ம நபர்.. வங்கி கவுண்டர் மேஜையிலிருந்து லாகவமாகப் பறந்த பணப்பை… மின்னல் வேகத்தில் தப்பியோடிய திருடன்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சி..!!
ராஜஸ்தானின் பரன் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் துணிகரத் திருட்டுச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பிரகாஷ் குப்தா என்ற நபர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 2.40 லட்சம் ரூபாயை ரொக்கமாகப் பெற்று, அதனை ஒரு பையில் பத்திரப்படுத்தினார். பின்னர், அந்தப் பையைக் கவுண்டர் மேஜை மீது வைத்துவிட்டு வங்கி ஊழியர்களுடன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவன் அதைக் குறிவைத்தான்.
బ్యాంక్లోకి వెళ్లాడు.. రూ.2.40 లక్షలతో ఉడాయించాడు
రాజస్థాన్ బరాన్ జిల్లా కేంద్రంలోని సెంట్రల్ బ్యాంక్ ఆఫ్ ఇండియాలో ఘటన
ప్రకాశ్ గుప్తా అనే వ్యక్తి తన బ్యాంక్ ఖాతాలో నుంచి రూ.2.40 లక్షలు విత్డ్రా చేసి.. ఒక బ్యాగ్లో పెట్టుకున్నారు
ఆ బ్యాగ్ని కౌంటర్ వద్ద పెట్టి సిబ్బందితో… pic.twitter.com/wzQ7enTbf0— PulseNewsBreaking (@pulsenewsbreak) August 18, 2026
பணப் பையைக் குறிவைத்த அந்தத் திருடன், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சத்தமில்லாமல் அதனை எடுத்துத் தனது சொந்தப் பைக்குள் போட்டுக்கொண்டு எவ்விதத் பயமுமின்றி வங்கியை விட்டு வெளியேறினான். வெளியே அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்த கூட்டாளியுடன் பைக்கில் ஏறித் தப்பியோடிவிட்டான். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மிரட்டல் நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
