“ரூ.40 லஞ்சம் அல்ல… விவசாயிகள் தரும் அன்பளிப்பு..!” சட்டப்பேரவையில் OS மணியன் பேச்சால் வெடித்த சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரூ.40 லஞ்சம் அல்ல… விவசாயிகள் தரும் அன்பளிப்பு..!” சட்டப்பேரவையில் OS மணியன் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!

Published

on

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வழங்கும் ரூ.40 லஞ்சம் அல்ல, அது அன்பளிப்புதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் OS மணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக பேசிய அவர், கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் வழங்கும் ஒரு சிறிய தொகை இது என்றும், இதனை தவறாகக் கருதக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், அரசு அமைப்புகளில் இதை அன்பளிப்பு என்ற பெயரில் நியாயப்படுத்துவது ஊழலை ஊக்குவிக்கும் செயல் என பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. விவசாயிகளிடம் இருந்து எவ்வித கூடுதல் தொகையும் பெறாமல் கொள்முதல் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற கருத்துகள் லஞ்சப் போக்கை நியாயப்படுத்த வழிவகுக்கும் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in