LATEST NEWS
இப்போ யார் எட்டப்பன்… இவரா..? அவரா..? சூடு சொரணை உள்ள காங்கிரஸ்காரங்க சொல்லணும்… மேடையில் கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி..!!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தற்போதைய நிலைப்பாட்டை விமர்சித்து, “இப்போது யார் எட்டப்பன்… இவரா? அவரா? சொரணை உள்ள காங்கிரஸ் காரர்கள் தான் சொல்ல வேண்டும்” என திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையை ஏற்றுக்கொள்பவர்கள் எட்டப்பனுக்குச் சமம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னரே குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டமன்றத் தீர்மானத்திற்கு முரணாக டெல்லி சந்திப்பிற்குப் பின் “நியாயமான தொகுதி மறுவரையறை” வேண்டும் என முதலமைச்சர் விஜய் பேசியிருப்பதை காங்கிரஸ் தொண்டர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று சாடியுள்ளார்.
மேலும் இதே மேடையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தற்போதைய தவெக ஆட்சியில் விருதுகள் வழங்கப்படும் விதம் குறித்தும் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஒருவேளை மு.க.ஸ்டாலின் தற்போதும் முதலமைச்சராக இருந்திருந்தால், தமிழ்நாட்டின் உயரிய ‘தகைசால் தமிழர்’ விருதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்குக் கொடுத்து கௌரவித்திருப்பார் என்றும், ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தகுதியானவர்களைப் புறக்கணிப்பதாகவும் அவர் தனது பேச்சில் ஒப்பிட்டுக் குற்றம் சாட்டியுள்ளார்.
