LATEST NEWS
“டாக்டர் குடுகுடுன்னு நடுவுல ஓடி வர்றாரே.. கேமராவுல காட்டுங்க..!” அமைச்சர் ராஜ்மோகன் போட்ட ஆர்டரில் ஆடிப்போன எதிர்க்கட்சி பெஞ்ச்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் நடந்துகொண்டிருந்த போது, அமைச்சர் ராஜ்மோகன் ஆர்முகம் சபாநாயகரிடம் வைத்த அதிரடியான கோரிக்கை அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவையில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகன், “நம்முடைய கேமரா குழுவினர், எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் அடிப்பதையும், ஒருமையில் பேசுவதையும் நேரலையில் காட்ட வேண்டும்” என்று பேசினார். மேலும், “நான் பேசும்போது கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த ஒரு டாக்டர் சட்டென்று பதற்றமடைந்து, குடுகுடுவென எழுந்து அவையின் நடுப்பகுதிக்கு ஓடிவருகிறார்; அதை அப்படியே ஸ்பிளிட் ஸ்கிரீனில் திரையிட்டு கேமரா குழுவினர் காட்ட வேண்டும்” என சபாநாயகரிடம் பகிரங்கமாக வலியுறுத்தினார்.
“லாஸ்ட் பெஞ்ச்ல இருந்த டாக்டர் குடுகுடுன்னு எந்திரிச்சு நடுவுல வந்துட்டாரு.. கேமரா டீமை அதையும் காட்டச்சொல்லுங்க” – அமைச்சர் ராஜ்மோகன் சொன்னதும் உடனே நடந்த மாற்றம்#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS |… pic.twitter.com/Uia5PU6XEZ— Polimer News (@polimernews) August 21, 2026
அமைச்சர் ராஜ்மோகன் இவ்வாறு கேமரா டீமை சுட்டிக்காட்டிப் பேசிய உடனே, சட்டப்பேரவை நேரலையில் அதுவரை ஆளுங்கட்சியினரை மட்டுமே காட்டி வந்த கேமராக்கள், உடனடியாக எதிர்க்கட்சி பெஞ்ச் பக்கமும் திரும்பின. அமைச்சரின் இந்தத் திடீர் அஸ்திரத்தால், கடைசி பெஞ்சில் இருந்து அவசர அவசரமாக எழுந்து நடுவே ஓடிவந்த எதிர்க்கட்சி மருத்துவர் மற்றும் கமெண்ட் அடித்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள் அனைவரும் நேரலையிலேயே கையும் களவுமாகச் சிக்கி கடும் தர்மசங்கடத்திற்கு ஆளாகினர். நேரலை என்பது ஆளுங்கட்சிக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில், முழுமையான நேரலையைத் தான் தங்கள் அரசு வழங்கி வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் இந்த சம்பவத்தின் மூலம் அவையிலேயே நிரூபித்துக் காட்டினார்.
