LATEST NEWS
“70 ரூபாய் சரக்கு அடிச்சிருச்சோ..?” தலையைக்கூட தூக்க முடியாம தள்ளாடிய பாம்பு ..! இணையத்தை அலற வைக்கும் கிங் கோப்ராவின் ஃபன்னி வீடியோ..!!
சோஷியல் மீடியாவில் தினமும் பல்வேறு ஆச்சரியமூட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் இந்த முறை ஒரு மிகப்பெரிய கிங் கோப்ரா (ராஜநாகம்) செய்த விசித்திரமான செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு பெரிய ராஜநாகப் பாம்பு சேறும் புதரும் நிறைந்த நிலப்பகுதியில் தன் உடலின் சமநிலையைத் தக்கவைக்க முடியாமல் தள்ளாடும் காட்சி பதிவாகியுள்ளது. பாம்பின் உடல் அந்த அளவிற்குத் தடுமாறுவதைப் பார்த்த இணையவாசிகள், பாம்பு மது அருந்திவிட்டு போதையில் மிதப்பதாகக் கிண்டலாகக் கூறி வருகின்றனர்.
X தளத்தில் @Mountain4u என்ற பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்த ராஜநாகம் மீண்டும் மீண்டும் தன் படத்தை உயர்த்தி நிமிர்ந்து நிற்க முயற்சிப்பதும், ஆனால் ஒவ்வொரு முறையும் நிலைதடுமாறி கீழே விழுவதும் தெளிவாகத் தெரிகிறது. “பாம்பு 70 ரூபாய் நாட்டுச் சரக்கை அடித்துவிட்டது போலிருக்கிறது” என்று நகைச்சுவையான தலைப்புடன் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. குறுகிய நேரத்திலேயே வைரலான இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துவிட்டு, கருத்துப் பிரிவில் “நாக பஞ்சமிக்கு பாலுக்குப் பதில் சரக்கு ஊற்றிவிட்டார்களா?”, “இதுவரை மனிதர்கள் தான் குடித்துப் பார்த்திருக்கிறோம், இப்போது விலங்குகளும் தொடங்கிவிட்டன” எனப் பலவாறாகக் கலாய்த்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இருப்பினும், பாம்பின் இந்தத் தடுமாற்றத்திற்கு போதை காரணம் அல்ல என்று வனவிலங்கு நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். பாம்புகளுக்கு ஏதேனும் கடுமையான காயம் ஏற்பட்டாலோ, பிற விலங்குகளுடன் சண்டையிட்டுப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உடலில் நீரிழப்பு மற்றும் நரம்பியல் சார்ந்த நோய்கள் தாக்கியிருந்தாலோ மட்டுமே அவற்றால் உடலின் சமநிலையைப் பேண முடியாமல் இவ்வாறு தள்ளாடும் நிலை ஏற்படும் என்று அவர்கள் விளக்குகின்றனர்.
