LATEST NEWS
“அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..” என்ன படிக்க வச்ச எம்.ஜி.ஆரையே எதிர்த்துப் பேசினவன் நான்… சட்டசபைனா சும்மா இல்ல.. .. மாஸ் காட்டிய அமைச்சர் துரைமுருகன்..!!
“அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அரசியல் உலகத்தில்..” என்ற சினிமா பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி, சட்டசபையில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் விரிவாக விளக்கியுள்ளார். சட்டமன்ற விவாதங்களின் போது பழைய நினைவுகளைப் பகிர்ந்த அவர், தன்னை வளர்த்து, 7 ஆண்டுகள் படிக்க வைத்த தனது ஆசான் எம்.ஜி.ஆரையே சட்டசபையில் தான் நேருக்கு நேர் எதிர்த்துப் பேசியவன் என்று தனது அரசியல் அனுபவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
சட்டமன்ற ஜனநாயகம் மற்றும் விவாத களம் குறித்துப் பேசிய அவர், சபைக்கு வரும்போது எதிர்க்கட்சிக்காரர் எப்போதுமே வாளோடுதான் வரவேண்டும் என்றும், அதற்குப் போட்டியாக ஆளுங்கட்சிக்காரர் கேடயத்தோடுதான் வர வேண்டும் என்றும் ஒரு சுவாரசியமான உதாரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியினர் கேள்விக் கணைகளாகிய வாளை வீசும்போது, ஆளுங்கட்சியினர் தங்களின் பதில்களால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் இத்தகைய ஆக்கப்பூர்வமான மோதல்களும் வாதங்களும் இருக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து சபைக்கு வந்துவிட்டு சலாம் போட்டுவிட்டு சும்மா போகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். துரைமுருகனின் இந்த அனுபவப்பூர்வமான மற்றும் சுவாரசியமான பேச்சு, சட்டமன்றத்தில் எப்படி ஆரோக்கியமான முறையில் விவாதங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை தற்போதைய இளம் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
