CINEMA
“இதெல்லாம் இருந்தா தான் ஓகே..! முதலமைச்சர் விஜய்யின் மருமகளாக இந்த தகுதி கண்டிப்பா வேணும்..! மகன் ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ரகசியம்..!!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ‘சிக்மா’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் வரவிருக்கும் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில் ஜேசன் சஞ்சய் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், தன்னுடைய காதலி எப்படி இருக்க வேண்டும், எந்த விஷயங்கள் பிடிக்கும், எது பிடிக்காது என்பது போன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
தன்னுடைய காதலி உணவை மிகவும் விரும்புபவராக இருக்க வேண்டும் என்றும், தன்னைப்போலவே அட்வென்ச்சராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புதுப்புது இடங்களைத் தேடிச் சென்று, புதிய விஷயங்களை எக்ஸ்ப்ளோர் செய்ய விரும்புபவராகவும், பொருளாதார ரீதியாக சுயமாக இயங்குபவராகவும் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதே சமயம், மிகவும் ‘ஹை மெயின்டனன்ஸ்’ கொண்டவராக இருக்கக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் படங்களையும், பாடல்களையும் பார்க்காமலும் கேட்காமலும் இருப்பது மிகப்பெரிய ‘ரெட் ஃபிளாக்’ என்று கூறியுள்ள அவர், “ஏனென்றால் நான் எப்போதும் திரைப்படங்களிலிருந்து ரெஃபரன்ஸ்களையும், கவுண்டர்களையும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்; அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அந்த வைப் இருக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது முன்னுரிமைகளையும், வாழ்க்கை முறையையும் காதலி புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அதை புரிந்துகொள்ளாமல் இருந்தால் அவர்களுக்காகத் தன்னை மாற்றிக்கொள்ள முடியாது என்றும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
