LATEST NEWS
ஆபாச வீடியோ, QR கோட் மூலம் பணமா..? “தனி அறையில் முடங்கி கிடக்கிறேன்”.. மனவேதனையில் இருக்கிறேன்.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் போலீஸ் கண்ணீர் நேரலை..!!
சமூக ஊடக வீடியோ சர்ச்சை காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரப் பிரதேச பெண் காவலர் அனு கோலிஸ், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு யூடியூப் நேரலையில் கண்ணீருடன் விளக்கம் அளித்துள்ளார். பிரபல சமூக ஊடக பிரமுகர் அமித் கில்ஹோர் என்பவர், தன்னுடைய அனுமதியின்றி தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து தனது வாழ்க்கையையும் பணியையும் சிதைத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாகத் தனி அறையில் முடங்கிக் கிடப்பதாகவும், தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையால் தான் மிகுந்த மனவேதனையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய வீடியோவில் தான் அணிந்திருந்த ஆடை சாதாரணமானதுதான் என்றும், தனது குடும்பத்தினருக்கே அதில் ஆட்சேபனை இல்லாதபோது மற்றவர்கள் ஏன் அவதூறு பரப்புகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக ஊடகங்கள் மூலம் தான் எந்தவொரு ஆபாச உள்ளடக்கத்தையும் வெளியிடவில்லை என்றும், நன்கொடைகளைப் பெறவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீதான புகார்களை நிரூபிக்கத் தனது வங்கிக் கணக்குகளைச் சோதிக்கலாம் எனச் சவால் விடுத்துள்ள அனு கோலிஸ், தான் எந்தத் தப்பும் செய்யாததால் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், துறை ரீதியான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
