பரந்தூரில் மெகா நில மோசடி அம்பலம்..! ஏர்போர்ட் பிளான் போடுறதுக்கு முன்னாடியே வளைக்கப்பட்ட சொத்துக்கள்… “அவங்க சம்பாதிக்கத்தான் ஏர்போர்ட்டே கொண்டு வந்தாங்க…” பகீர் கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பரந்தூரில் மெகா நில மோசடி அம்பலம்..! ஏர்போர்ட் பிளான் போடுறதுக்கு முன்னாடியே வளைக்கப்பட்ட சொத்துக்கள்… “அவங்க சம்பாதிக்கத்தான் ஏர்போர்ட்டே கொண்டு வந்தாங்க…” பகீர் கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!

Published

on

“பரந்தூரில் மிகப்பெரிய அளவில் நில மோசடி…” நடந்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகப்பெரிய வெடிக்குண்டைப் போட்டுள்ளார். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை (DPR) அதிகாரப்பூர்வமாகத் தயாராவதற்கு முன்பாகவே, ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த நிலத்தைச் சுற்றி மிகப்பெரிய அளவில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காகவும், நிலத்தின் மதிப்பை உயர்த்திப் பணம் சம்பாதிப்பதற்காகவும் மட்டுமே திட்டமிட்டுப் பரந்தூரில் விமான நிலையத் திட்டம் உருவாக்கப்பட்டது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சாடினார். இந்த விவகாரத்தில் பின்னணியில் உள்ள நில மோசடிகள் குறித்துப் பத்திரப்பதிவுத்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கு முதலமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் அவர் அவையில் வலியுறுத்தினார்.

Advertisement

பரந்தூர் திட்டத்தின் பின்னணியில் நடந்துள்ள இந்த முறைகேடுகளைத் தவெக அரசு சாதாரணமாகக் கடந்து செல்லாது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடைத்த இந்த நில மோசடிப் புகார், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வரிசையினரிடையே மிகப்பெரிய விவாதத்தையும் அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in