LATEST NEWS
“அப்படியே எல்லா திட்டத்தையும் மூடிடலாமா?” 27,500 கோடி பரந்தூர் ஏர்போர்ட் ரத்து செய்வது சரியா… தவெக அரசை வெளுத்து வாங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி..!!
“தவெக அரசு, 27,500 கோடி ரூபாய் மதிப்பிலான பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்தை வெறும் அரசியல் காரணங்களுக்காகக் கைவிடுவது சரியா?” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழகத்தின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான இத்தகைய பிரம்மாண்டமான திட்டங்களை, அரசியல் லாப நஷ்டங்களை மட்டும் கணக்கில் கொண்டு ரத்து செய்வது மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, அரசு மாற்று இடத்தைத் தேர்வு செய்யும்போதும் அங்கும் உள்ளூர் விவசாயிகள் இதேபோன்று போராட்டத்தில் இறங்கினால் என்ன செய்வீர்கள் என்றும் அவர் சாடியுள்ளார். விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதற்காக ஒவ்வொரு முறையும் திட்டங்களைக் கைவிட்டுக் கொண்டே போனால், எதிர்காலத்தில் தமிழகத்தில் எந்தவொரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தையும் செயல்படுத்தவே முடியாது என்றும் கிருஷ்ணசாமி தவெக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
