LATEST NEWS
“அம்மா என்னை மன்னிச்சிரு.. என் மகள பத்திரமா பார்த்துக்கோ..!” வாயில் இரத்தம் வழிய விபத்தில் துடித்த தந்தையின் இறுதி நிமிடங்கள்.. நெட்டிசன்களை கண்கலங்க வைக்கும் வீடியோ..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு கோர விபத்தில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர், தனது இறுதி நிமிடங்களில் தன் தாயை நினைத்து உருகியதோடு, “அம்மா, என்னை மன்னித்துவிடு.. என் மகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்!” என்று கண்ணீருடன் பாசப் போராட்டம் நடத்திய நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த ஓட்டுநரின் வாயிலிருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டு வெளியேறியுள்ளது. தான் இனி உயிர் பிழைக்க மாட்டோம், தனது இறுதி மூச்சு நெருங்கிவிட்டது என்பதை அந்தத் தந்தை ஆழமாக உணர்ந்துள்ளார். அந்த மரண பயத்திலும், இறுதி நொடியிலும் அவருக்குத் தனது பிஞ்சு மகளின் எதிர்காலம் மட்டுமே நினைவுக்கு வந்துள்ளது.
एक पिता अपने जीवन के जब अंतिम छड़ में पहुंचा तो मां को याद किया और बोला मेरी बेटी का ध्यान रखना!
घटना विशाखापट्टनम की है एक्सीडेंट के बाद ड्राइवर बुरी तरह घायल हो चुका था मुंह से गजार आ रहा था।
उसे आभास हो चुका अब हम नहीं बचेंगे।
आंखों में आशु लिए रोता हुआ बोला मां मुझे माफ… pic.twitter.com/FILcFH95rF— Er. Kripa Shankar (@ErKripaShankary) August 25, 2026
கண்களில் கண்ணீர் வழிய, தனது தாயிடம் மழலை மகளின் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டு அவர் தனது இன்னுயிரைத் துறந்த உன்னதக் காட்சி அக்கம் பக்கத்தினரையும், மீட்புப் படையினரையும் உ உறைய வைத்துள்ளது. வறுமையோ அல்லது மரணமோ எதுவாக இருந்தாலும், ஒரு மனிதனின் இறுதி நிமிடங்களில் அவனது பெற்றோர்களும், பெற்ற பிள்ளைகளும் மட்டுமே மனக்கண்ணில் வந்து நிற்பார்கள் என்பதை இந்தத் துயரச் சம்பவம் உலகிற்கு மீண்டும் உணர்த்தியுள்ளது. மகளின் எதிர்காலத்திற்காகத் துடித்த அந்தத் தந்தையின் பாசப் போராட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான நெட்டிசன்களைக் கண்ணீர்க் கடலில் மூழ்கடித்து வருகிறது.
