CRIME
அடக் கடவுளே..! “கணவனையே துண்டால் கழுத்தை நெரித்து சாய்த்த கொடூரக் கூத்து.. அடுத்த நொடியே எஸ்கேப் ஆன மனைவி.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் (Bulandshahr) கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிரீத்தி என்ற பெண் தனது கணவரைத் துண்டால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்ததாக எழுந்துள்ள அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டத் தகவல்களின்படி, கொல்லப்பட்ட கணவருக்குக் கடுமையான மதுப்பழக்கம் இருந்ததால், தம்பதியருக்கு இடையே தினசரி படுக்கையறைப் பூசல்களும் காரசாரமான வாக்குவாதங்களும் தொடர்ச்சியாக அரங்கேறி வந்துள்ளன. இந்த நரக வாழ்க்கைக்கு நடுவே, அந்தப் பெண்ணிற்கு வேறொரு நபருடன் ‘காதல் துரோக’ கள்ளத்தொடர்புஇருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த மெகா நள்ளிரவு விபரீதக் கொலை அரங்கேறியிருக்கலாம் என்றும் அண்டை வீட்டார் தரப்பில் அனல் பறக்கும் புகார்கள் எழுந்துள்ளன.
https://twitter.com/udayamdigital/status/2092838689709904085/video/1
இந்நிலையில் குடும்பத் தகராறின் உச்சக்கட்டமாகத் தனது தாலியறுத்த கணவனையே துண்டால் லாக் செய்து உயிரைப் பறித்த இந்த அநாகரிக அராஜகக் கொலைச் சம்பவ வீடியோ தற்போது சோசியல் மீடியவில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள புலந்த்ஷாஹர் உள்ளூர் காவல்துறையினர், கணவனின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, தலைமறைவாக உள்ள ‘அந்த’ ஏமாற்றுக்காரப் பெண் பிரீத்தியைக் கையும் களவுமாக வளைத்துப் பிடிக்கப் பவர்ஃபுல் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுப்பழக்கத்தால் ஒரு குடும்பமே சாம்பலாகி, கள்ளக்காதலால் கணவன் கொலை செய்யப்பட்டுள்ள இந்த விசித்திர விபரம் ஒட்டுமொத்தப் பொதுவெளியையும் உறைய வைத்துள்ளது.
