LATEST NEWS
“அண்ணியாரே இது நியாயமா?” அவரு பேசினாலே சண்டை வருது… அவர பேச விடாதீங்க… சட்டப்பேரவையில் மோதிக்கொண்ட பிரேமலதா – ஆதவ் அர்ஜூனா.!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் ஆவேசக் கேள்விக்கு, த.வெ.க-வைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவையிலேயே “அண்ணியாரே இது நியாயமா?” என்று நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “மக்களுக்காகப் பேசுவது தான் சட்டமன்றம்; ஆனால் தினமும் இங்கு ஒருவருக்கொருவர் சண்டை தான் போட்டுக் கொள்கிறோம், இதனால் மக்களுக்கு என்ன பலன்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினாலே அவையில் சண்டை தான் வருகிறது; அவருக்குத் தயவுசெய்து பேச அனுமதி தராதீர்கள், மற்ற எல்லா உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்புக் கொடுங்கள்” என்று சபாநாயகரிடம் ஆவேசமாக முறையிட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “அண்ணியாருக்கும் எங்களுக்கும் எந்தப் தனிப்பட்ட பிரச்சினையும் கிடையாது; எதிர்க்கட்சியினர் நல்ல கருத்துக்களையோ, குறைகளையோ சொன்னால் நாங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம்” என்று குறிப்பிட்டார். அதை விட்டுவிட்டு, தங்களது கொள்கை குறித்து அவையில் போலிப் பிரச்சாரம் செய்வதால் தான் தாங்கள் அதைத் தடுத்து எதிர்த்துப் பேச வேண்டியுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்தின் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்தார்.
