“அந்த விஷயத்தில் அருணாவுக்கு ஆர்வம் அதிகம்” என்னால முடியல… சம்பவத்தன்றும் என்னை கட்டாயப்படுத்தி கூப்பிட்டார் அதனால் தான்… ஆந்திர பெண் கொலையில் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அந்த விஷயத்தில் அருணாவுக்கு ஆர்வம் அதிகம்” என்னால முடியல… சம்பவத்தன்றும் என்னை கட்டாயப்படுத்தி கூப்பிட்டார் அதனால் தான்… ஆந்திர பெண் கொலையில் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!!

Published

on

ஆந்திர மாநிலம், நகரி அருகே உள்ள நின்றை சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான அருணா என்ற பெண், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொட்டா ரெட்டி குப்பம் வயல்வெளியில் கடந்த ஆகஸ்ட் 28 அன்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் மாயமான நிலையில், முகம் ஆசிட் ஊற்றியும், மோட்டார் சைக்கிள் ஆயிலைக் கொண்டு தீ வைத்தும் சிதைக்கப்பட்ட அடையாளங்களுடன் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஊத்துக்கோட்டை போலீஸார், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அருணாவின் செல்போன் அழைப்புகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் இந்தத் தீவிர விசாரணையில், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகே உள்ள வதட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான பாரதிராஜா (வயது 44) என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். இவருக்கும் அருணாவிற்கும் இடையே கடந்த சில காலமாக கள்ளக்காதல் உறவு இருந்து வந்ததும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அருணாவின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவர்களது மகன் மற்றும் மகள் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கைது செய்யப்பட்ட பாரதிராஜா போலீஸாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில், அருணாவின் அதிகப்படியான செக்ஸ் தொல்லை காரணமாகவே அவரைத் தீர்த்துக்கட்டியதாகக் கூறியுள்ளார். அருணா தன்னை அடிக்கடி தனிமையில் சந்திக்கக் வற்புறுத்தியதாகவும், தாங்கள் உல்லாசமாக இருந்தபோது அதை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்து ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தன்றும் தன்னை உடனே வருமாறு வற்புறுத்தியதால், இந்தத் தொல்லையிலிருந்து விடுபட அருணாவை ஆசைவார்த்தை கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் ஆசிட் ஊற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். வாக்குமூலத்தைத் தொடர்ந்து பாரதிராஜாவை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரைச் சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in