CRIME
“எனக்கு மட்டன் குழம்பு தான் வேணும்..” மது போதையில் அடம் பிடித்த மகன்… ஆத்திரத்தில் தந்தை செய்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
பீகாரில் சாமுண்டா பகுதியில் வசித்துவந்த மகேஷ் என்பவருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததால், அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்துவிட்டு 2 குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மகேஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்துக்களின் புனித மாதமான ஸ்ராவண் மாதத்தில் ஒருநாள், மகேஷ் முழுமையாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வந்த வேகத்தில் தனக்கு மட்டன் கறி சமைத்துத் தருமாறு தனது தாயிடம் பிடிவாதம் பிடித்துள்ளார். அதற்கு அவரது தாய், “ஸ்ராவண் மாதத்தில் நாம் அசைவம் சாப்பிட மாட்டோம், வேறு ஏதாவது சாப்பிடு மகனே” என்று அன்போடு மறுத்துள்ளார்.
ஆனால், போதையில் இருந்த மகேஷ் விடாக்கண்டனாக மட்டன் கறிதான் வேண்டும் என்று தாயிடம் தகராறு செய்து, குறுக்கே வந்த தனது தந்தையுடனும் பயங்கரமான கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி அது ஒரு பெரிய சண்டையாக மாறிய இக்கட்டான நேரத்தில், ஆத்திரமடைந்த தந்தை தனது மகன் என்றும் பாராமல் மகேஷை தடிகளால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார். இந்த மிருகத்தனமான தாக்குதலில் பலத்த காயமடைந்த மகேஷ் அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், மகேஷின் பெற்றோரைக் கைது செய்து காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
