“அய்யோ கடவுளே..! கத்தியால் கிழித்து, தம்பதியைக் கட்டிப்போட்டு வெறியாட்டம்!” நள்ளிரவில் புகுந்த 4 முகமூடி கொள்ளையர்களின் அராஜகம்… நாமக்கல்லில் உறைந்த பெரும் பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ கடவுளே..! கத்தியால் கிழித்து, தம்பதியைக் கட்டிப்போட்டு வெறியாட்டம்!” நள்ளிரவில் புகுந்த 4 முகமூடி கொள்ளையர்களின் அராஜகம்… நாமக்கல்லில் உறைந்த பெரும் பயங்கரம்..!!

Published

on

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே, நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கணவன், மனைவியைக் கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் ரூ.40 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் கடந்த 20 வருடங்களாக வெல்லம் வியாபாரம் செய்து வரும் வைரவன் (60) மற்றும் அவரது மனைவி சுமதி (55) ஆகியோர் நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளது. வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அக்கும்பல், தடுத்த சுமதியையும் வைரவனையும் கொடூரமாகக் கட்டிப்போட்டதோடு, பணம், நகை இருக்கும் இடத்தை சொல்ல மறுத்த வைரவனைக் கத்தியால் கிழித்துக் காயப்படுத்திய பின் பீரோவில் இருந்த நகை, பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளது.

இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஸ் அசோக், துணை போலீஸ் சூப்பிரண்டு வெண்ணிலா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டின் பல்வேறு இடங்களில் பதிவாகியிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஜேடர்பாளையம் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் நள்ளிரவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிலிக்கல்பாளையம் பகுதியில் நள்ளிரவில் நடந்த இந்த துணிகர முகமூடி கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in